Skip to main content

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! - திருகோணமலை பகுதியில் பரபரப்பு.

Aug 24, 2023 38 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! - திருகோணமலை பகுதியில் பரபரப்பு. 

திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் பொலிஸ் தடுப்பு காவலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இச் சம்பவத்தால் திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றன.



இச்சம்பவம் நேற்றைய தினம் (23-08-2023) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை - ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரியவருகின்றது.



ஜமாலியா - கடற்கரை பகுதியில் 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.



இம்முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபரை 22 ஆம் திகதி மாலை தலைமையக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.



இந்த நிலையில் குறித்த இளைஞர் இன்று மாலை தலைமையக பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.



உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.



இதேநேரம் உயிரிழந்த குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என கேள்விப்பட்டதையடுத்து சிலர் தாக்கி உள்ளதாகவும் தெரியவருகிறது.



இத்தாக்குதலினால் ஜமாலியா - லவ்லேன் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.





குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இருந்த போதிலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுப்பு காவலில் வைத்திருந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மரணத்திற்காக நீதியை பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை