Skip to main content

கெட்ட கழிவுகள் வெளியேற வேண்டுமா?

Mar 22, 2022 82 views Posted By : YarlSri TV
Image

கெட்ட கழிவுகள் வெளியேற வேண்டுமா?  

இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.



உடலில் உணவின் வழி சேரும் கழிவுகளை வெளியேற்றாமல் விடுவதால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தல் முதல், பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுவது நல்லதாகும். 



அதனால் காலை நேரத்தில் சில பச்சை நிற காய்கறிகளின் ஜூஸைக் குடிப்பதன் மூலம் கெட்ட கொழுப்புகளை வேகமாகக் கரைக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.



நெல்லிக்காய் ஜூஸ்



நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கி, அதனுடன் சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, 2 புதினா இலைகள் சேர்த்து அரைத்து, வடிகட்டி ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக்கு முன்பாக எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது.



உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை எரித்து, தொப்பையைக் குறைக்கும்.



வெள்ளரிக்காய் மற்றும் முட்டைகோஸ் இரண்டையும் சிறிய துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 புதினா இலைகள், ஒரு சிட்டிகை சீரகம், 4 மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.



வடிகட்டிய முட்டைகோஸ் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு இரண்டில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்க்கும்போது கூடவே ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கலாம்.



ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை நன்கு மண் இல்லாமல் கழுவி சுத்தம் செய்து கொண்டு, அதனுடன் அரை கேரட் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு மிக்ஸியில் தண்ணீர் அரைத்து வடிகட்டி சாறெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.



இந்த சாறில் சிறிது லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர, குடலில் உள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு, தொப்பை குறைவதோடு ஓரிரு வாரங்களிலேயே உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.



கரிசலாங்கண்ணி - சோம்பு 



ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் கீரை தண்ணீரைச் சேருங்கள். இதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வறுத்து பொடி செய்த சீரகம் மற்றும் சோம்புத் தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் எடுத்துக் குடிக்கலாம்.



இந்த சூப் தலைமுடியை வளரச் செய்யும். முகத்தைப் பொலிவாக வைத்திருக்கும். எல்லாவற்றையும் விட கெட்ட கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்க மிகச்சிறந்த உணவு இது.



இந்த சூப்பை வாரத்தில் 2 நாள் இரவு உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் தூங்கும் முன் சோம்பு டீ, சோம்பு பால் என மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.  


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை