Skip to main content

மன்னாரில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

Aug 22, 2023 38 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! 

மன்னாரில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்விபத்து நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை