Skip to main content

அலைச்சறுக்குப் போட்டியில் அசத்திய வீரர்கள்! - மாமல்லபுரம் கடற்கரையில் சாகசம்.

Aug 22, 2023 34 views Posted By : YarlSri TV
Image

அலைச்சறுக்குப் போட்டியில் அசத்திய வீரர்கள்! - மாமல்லபுரம் கடற்கரையில் சாகசம். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை நடத்தியது.



இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.



இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர். இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலாரும் முந்திக்கொண்டு தங்கள் சாகசங்களை நிகழ்த்தினர். தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.



இதில் 4வது நாளான ஆகஸ்ட் 18 அன்று பெண்கள் அணியினர் களம் இறங்கி சாகசம் செய்தனர். அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது. அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே வரை முன்னிலையில் இருந்தனர். இறுதிச்சுற்றுக்கான தகுதியையும் பெற்றுள்ளனர். மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்று இருந்த, தமிழக வீர் சிவராஜ் பாபு, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



இப்போட்டிகள் கடந்த 19, 20 ஆகிய தேதி வரை நடைபெற்றது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலாளரும் போட்டி போட்டுக் கொண்டு அலையில் தங்கள் சாகசங்களை நிகழ்த்தினர். இப்போட்டி நேற்று (20ம் தேதி) வரை நடைபெற்றது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை