Skip to main content

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான ஆசிரியை உயிரிழப்பு!

Aug 21, 2023 37 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான ஆசிரியை உயிரிழப்பு! 

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.



கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .



கிளிநொச்சில் விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம் | The Teacher Died In Kilinochchi



நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் மோட்டார் வண்டியில் வட்டக்கச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்துக்குள்ளாகிய ஆசிரியர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பங்கையற்ச்செல்வனின் சகோதரி என்றும் வட்டகச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியரும்  ஆவார்.



விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை