Skip to main content

ஆத்திரமடைந்த ரஷ்யா: ஸ்வீடனுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

Feb 26, 2022 75 views Posted By : YarlSri TV
Image

ஆத்திரமடைந்த ரஷ்யா: ஸ்வீடனுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை! 

ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்னதாக அறிவித்திருந்தார்.



ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வேதனை தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் ஸ்வீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூட்டினுக்கு (Vladimir Putin) எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனின் செயலால் ஆத்திரமடைந்த ரஷ்யா, ஸ்வீடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை