Skip to main content

நோக்கியாவின் புதிய 5G மொபைல்.. இத்தனை அம்சங்களா? - வெளியான புதிய தகவல்கள்!

Aug 21, 2023 124 views Posted By : YarlSri TV
Image

நோக்கியாவின் புதிய 5G மொபைல்.. இத்தனை அம்சங்களா? - வெளியான புதிய தகவல்கள்! 

மேலும், பேட்டரியில் முன்பெல்லாம் மொபைல் என்றாலே நோக்கியா தான் என்ற காலம் இருந்தது. போனின் நீடித்துழைக்கும் உறுதி தன்மை, சிறந்த பேட்டரி திறன் மற்றும் எளிதில் கழற்றி யூசர்களே வேறு பேட்டரி மாற்றிக் கொள்ள கூடிய வசதி உள்ளிட்டவை நோக்கியாவை மக்களிடையே மிகவும் பிரபலமாகியது.



இதனிடையே தற்போது, நோக்கியா மீண்டும் ஒரு ரிமூவபிள் பேட்டரி கொண்ட போன்களை தயாரித்திருக்கிறது, ஆனால் முன்பை போல இந்த வசதியை பட்டன் போனில் இல்லாமல் ஸ்மார்ட் போனில் கொடுக்கிறது நோக்கியா நிறுவனம். இந்த பிராண்ட் மார்க்கெட்டில் இரண்டு புதிய ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை,  Nokia C210 மற்றும் Nokia G310 மொபைல்கள்.



புதிய 2 நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் HMD Global நிறுவனம், இந்த இரண்டுமே ரிப்பேர் செய்வதற்கு எளிதானவை மட்டுமல்ல, பேட்டரியை யூஸர்களே எளிதாக மாற்றவும் அனுமதிக்க கூடியவை என தெரிவித்துள்ளது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மொபைல்களில்,  Nokia G310 மட்டுமே 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.



அந்த வகையில் Nokia G310 5G மொபைல் User-Replaceable Battery அம்சம் கொண்ட  முதல் 5G-எனேபிள்ட் ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது DIY ரிப்பேர் ஃபிரெண்ட்லி ஹார்டுவேர் கொண்ட மலிவு விலை ஆண்ட்ராய்டு மொபைல் போனாகவும் இருக்கிறது. மேற்காணும் இரு மொபைல்களிலும் ஃபோன்களின் டிஸ்ப்ளே, பேட்டரி அல்லது சார்ஜிங் போர்ட் போன்ற பாகங்களை யூஸர்களே எளிதாக சரிசெய்ய முடியும் என நோக்கியா நிறுவனம் கூறுகிறது. யூஸர்கள் சர்விஸ் சென்டருக்கு செல்லாமலேயே இந்த பார்ட்ஸ்களில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்வதற்கான டூல்ஸ்களை வழங்குவதற்காக நோக்கியா iFixit-உடன் இணைந்து செயல்படுகிறது.



Nokia C210 மொபைலின் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை $109 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9000) ஆகும். Nokia C310 5G மொபைலின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை $186 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 15,400)



நோக்கியா G310 5G மொபைலானது USB Type-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இது "QuickFix Repairability"  அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்காணும் 2 போன்களும் QuickFix டிசைனை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன, இது பழுதுபார்ப்பதை எளிதாக்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. ஃபோனின் பேட்டரியை ரிமூவ் செய்யும் அம்சத்தால் யூசர்கள் பேட்டரிக்கு ஏற்படும் பிரச்சனையை சரிசெய்ய அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை



பிரச்னை என்றால் நீங்களே புதிய பேட்டரியை கடையில் வாங்கி போனில் ஃபிட் செய்து கொள்ளலாம். இதேபோல் மேற்காணும் மொபைல்களின் தனித்துவ வடிவமைப்பு, மொபைலின் டிஸ்ப்ளே-வில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அல்லது USB சார்ஜிங் போர்ட் வேலை செய்யவில்லை என்றாலோ, அதனை யூசர்களே சுலபமாக மாற்றும் வண்ணம் இந்த மாடல் மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது .



சுருக்கமாக சொன்னால் இந்த ஃபோன்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய நீங்கள் என்ஜினியராக இருக்க வேண்டிய அவசியமில்லை.



 


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை