Skip to main content

2023இல் மத்திய அரசின் டாப் 5 அறிவிப்புகள்... மக்களவையை மீண்டும் குறிவைக்கும் பிரதமர் மோடி!

Dec 26, 2023 27 views Posted By : YarlSri TV
Image

2023இல் மத்திய அரசின் டாப் 5 அறிவிப்புகள்... மக்களவையை மீண்டும் குறிவைக்கும் பிரதமர் மோடி! 

பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான பாஜக அரசு மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சியமைத்தது. தற்போது வரை ஒன்பதரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், பாஜக அரசுக்கு 2023ஆம் ஆண்டு என்பது மிக முக்கிய ஆண்டாக பார்க்கப்பட்டது. 



தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தொலைநோக்காக களத்தில் பல பணிகளை தொடங்கிவிட்டது என்பது அரசியல் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது. அதுவும் இந்தாண்டு தொடக்கத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்றுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி தக்கவைத்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. முன்னர் கூறியது போன்று பாஜகவுக்கு முக்கியமாக பார்க்கப்படும் இந்த 2023ஆம் ஆண்டில், மத்திய பாஜக அரசின் டாப் 5 அறிவிப்புகளை இங்கு காணலாம். 



பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் இலவச ரேஷன் திட்டம் (Free Ration Scheme) குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு (Central Government) முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்தது. 81 கோடி பயனார்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் மூலம் 2028ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த செலவு ரூ.11.8 லட்சம் கோடியாகும்.





                       மகளிர் இடஒதுக்கீடு மசோதா



இந்திய அரசியல் என்பது பாலின சமத்துவத்தை நோக்கி பெரும் பாய்ச்சலை முன்வைக்க இருப்பதாக இந்த மசோதா (Women Reservation Bill) கொண்டுவரப்பட்டபோது பலராலும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா 2023ஆம் ஆண்டு செப். 19ஆம் தேதி மக்களவையிலும், செப். 21ஆம் தேதி மாநிலங்களைவயிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு செப். 29ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், இது சட்டமாக மாறியது. 





                    2000 ரூபாய் நோட்டுக்கு தடை 



2016ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த பின்னர் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தது. அதன்பின், 2000 ரூபாய் நோட்டு (Rs 2000 Note Ban) மக்களிடம் அதிக புழக்கத்தில் வரவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மே 19ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. 



முதலில் காலக்கெடு அனைத்து வங்கிகளிலும் செப். 30ஆம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து மாறிக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. அக். 7ஆம் தேதியோடு வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் நடைமுறை நிறைவடைந்தது. அதன்பின், அக். 9ஆம் தேதியில் இருந்து ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.



                   சிலிண்டர் விலை குறைப்பு



கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடி அரசு, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் (LPG Cylinder Price) 200 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உஜ்வாலா திட்டத்தின் பயனார்களுக்கு கூடுதல் பலனை அளித்தது.  அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த தள்ளுபடியுடன் தற்போது சலுகையையும் சேர்த்து விலையில் 400 ரூபாய் குறைந்தது. 



                     விஸ்வகர்மா யோஜனா



இந்தாண்டு சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இந்த முக்கிய திட்டத்தை அறிவித்தார். விஸ்வகர்மா யோஜனா திட்டமான இதற்கு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தார். இதில், கைவினை கலைஞர்கள், கைவினை தொழிலாளர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டைகள், சான்றிதழ்கள், ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் குடும்பங்களுக்கு பயிற்சியளிப்பும் இந்த திட்டத்தின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் உள்ளதாக எதிர்ப்புகளும் எழுந்தன. 

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

8 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை