Skip to main content

ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு கிரிஸ்ப்பி தோசையை இப்படி தான் செய்வார்களாம்? அட இந்த தோசைக்கு இட்லி அரிசி, புழுங்கல் அரிசி எதுவுமே சேர்க்க மாட்டாங்களாம் தெரியுமா? 

Aug 11, 2023 59 views Posted By : YarlSri TV
Image

ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு கிரிஸ்ப்பி தோசையை இப்படி தான் செய்வார்களாம்? அட இந்த தோசைக்கு இட்லி அரிசி, புழுங்கல் அரிசி எதுவுமே சேர்க்க மாட்டாங்களாம் தெரியுமா?  

தோசை என்றாலே நமக்கு நல்ல மொறு மொறுவென்று சிவந்து பார்க்கும் போது நாக்கில் எச்சில் வரும் அளவிற்கு ருசியாக இருக்க வேண்டும். அப்படியான தோசை சாப்பிட வேண்டும் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது ஹோட்டல் தான். அங்கு கொண்டு வரும் தோசையை பார்க்கும் போதே பசி எடுக்கும். அப்படி ஒரு சுவையான தோசையை நாமும் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.



 ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு கிரிஸ்பி தோசை செய்ய தேவையான பொருள்



- பச்சரிசி – 2 கப்



-  முழு உளுந்து -1/2 கப்,



- கடலை பருப்பு – 1/2 கப்



- வெந்தயம் – 1ஸ்பூன்



- சர்க்கரை -1 ஸ்பூன்



- அவல் – 1/4 கப்



- ரவை -2 டேபிள் ஸ்பூன்



- சர்க்கரை -1 ஸ்பூன்



- உப்பு – தேவையான அளவு.



 



ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு கிரிஸ்பி தோசை செய்முறை



இந்த தோசை செய்ய அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் இவை நான்கையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு இதை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதே போல் அவலையும் தனியாக சுத்தம் செய்து அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.



                                                                  இப்பொழுது மிக்ஸியில் நீங்கள் ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பு வகைகளை சேர்த்து அரைக்க ஆரம்பிங்க. பாதி அளவு அரை பட்டவுடன் ஊற வைத்த அவலை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் அதில் ரவை, சர்க்கரை இரண்டையும் சேர்த்து இத்துடன் உப்பையும் கலந்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். இது எட்டு மணி நேரம் வரை அப்படியே இருக்க வேண்டும்.



                                   எட்டு மணி நேரம் கழித்து இந்த மாவை எடுத்து தேவையான அளவிற்கு மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு மீதி மாவை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாவு புளிக்காமல் ருசியாக நன்றாகவும் இருக்கும். இப்போது எடுத்து வைத்த மாவில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை ஊற்றி விடலாம்.



தோசை ஒரு புறம் சிவந்து வந்தவுடன் எண்ணெய் அல்லது நெய் உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்து சொட்டு சாப்பிடுங்கள் மற்றும் மொறு மொறுவென்று சிவந்து பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் இந்த தோசை இருக்கும் நீங்களும் இத ட்ரை பண்ணி பாருங்க.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை