Skip to main content

71 ஆயிரம் பேருக்கு வேலை-பிரதமர் மோடி!...

Apr 14, 2023 69 views Posted By : YarlSri TV
Image

71 ஆயிரம் பேருக்கு வேலை-பிரதமர் மோடி!... 

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்ட விழா.  காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்வில், 71 ஆயிரம் பேருக்கு, ஒன்றிய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை வழங்கி மோடி பேசுகையில்,‘‘முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 8 கோடி புதிய தொழில் முனைவோர் உருவாகியிருக்கின்றனர். அரசின் கொள்கைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இநத் திட்டத்தின் கீழ் 23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.



அதில்,70 சதவீதம் பெண்கள் ஆவர். தாங்கள் பெரிய பொருளாதார நிபுணர்கள் என கருதும் சிலர் பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன்களை வழங்கி உள்ளனர். ஆனால் சாதாரண நபர்களின் திறமைகள் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் இந்த திட்டத்தை குறை கூறுகின்றனர்’’ என்றார். அண்மையில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த தொகையையே அதிகம் பேர் பெற்றுள்ளனர் என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



கார்கே கிண்டல்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து வெளியிட்ட அறிக்கையில்,மோடி மீண்டும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆட்சேர்ப்பு கடிதங்களை விநியோகிக்கிறார். இந்த நிகழ்வில் ரயில்வே துறையில் இருந்து மட்டும் 50 ஆயிரம் கடிதங்கள் வந்துள்ளன. ரயில்வேயில் 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு துறைகளில் 10 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.மோடி அரசு 10வது ஆண்டில் செய்யும் ஸ்டண்ட் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.



தியாகிகளுக்கு அஞ்சலி

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், கடந்த 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்தத் தியாகிகளின் ஒப்பற்ற துணிச்சலும் தியாகமும் வருங்காலத் தலைமுறையினரை வழிநடத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை