Skip to main content

திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளது உண்மையே – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு!

Sep 23, 2022 66 views Posted By : YarlSri TV
Image

திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளது உண்மையே – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு! 

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என அந்த சங்கத்தின் செயற்குழு உறுதியளித்துள்ளது.



ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.என்.எச்.நிஹால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் உபுல் ரோஹன கூறியதை விட அதிகமான அஃப்லாடாக்சின் இருப்பதாக தெரிவித்துள்ளார்.



மேலும் விநியோகிக்கப்பட்ட திரிபோஷா மனித பாவனைக்கு உகந்ததல்ல எனவும் தொழிற்சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் செயற்குழு தெரிவித்துள்ளது.



பொறுப்புள்ள தொழிற்சங்கமாக தாங்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்றும் தாங்கள் முன்வைத்த அனைத்து அறிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் நிஹால் மேலும் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை