Skip to main content

உக்ரைனுக்கு 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்!

Sep 20, 2022 68 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனுக்கு 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்! 

உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.



அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை  இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு பிரித்தானியா வழங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உடன் ஒத்துப்போகும் அல்லது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நியூயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது, உக்ரைனுக்கு தொடர்ச்சியான மற்றும் கணிசமான இராணுவ உதவி பற்றிய செய்தியை வழங்குவார் என்று தெரிவித்துள்ளது.



பிரித்தானியா ஒவ்வொரு அடியிலும் உங்களுக்குப் பின்னால் தொடர்ந்து இருக்கும் என ட்ரஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னதாக உக்ரைன் மக்களுக்கு உறுதியளித்ததாக தி ஃபைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.



நாட்டின் கிழக்கில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக வெற்றிகரமான எதிர்த்தாக்குதலுக்கு அழுத்தம் கொடுத்து வரும் உக்ரைனியப் படைகளின் முன்னேற்றங்களுக்கு மத்தியில், உக்ரைனுக்கான தங்கள் ஆதரவை அதிகரிக்க மேற்கத்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையைப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



2022ஆம் ஆண்டு 2.63 பில்லியன் டொலர்களை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கியதன் விளைவாக உக்ரைனுக்கு இரண்டாவது பெரிய இராணுவ நன்கொடையாக பிரித்தானியா மாறியுள்ளது.



பிரித்தானியா இராணுவ உதவியில் நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுகள், 120 கவச வாகனங்கள், ஐந்து வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சுமார் 27000 உக்ரைனிய துருப்புக்கள் 2015ஆம் ஆண்டு முதல் பிரித்தனிய படைகளால் பயிற்சி பெற்றுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை