Skip to main content

மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர!

Sep 20, 2022 60 views Posted By : YarlSri TV
Image

மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை - காஞ்சன விஜேசேகர! 

விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும். மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது. நிதியமைச்சு நிவாரணம் வழங்க தீர்மானித்தால் அதனை செயற்படுத்த தயார் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



பிரதிசபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடிய போது விகாரைகள் மற்றும் மத தலங்களுக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்கல் குறித்து எதிர்தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



பாராளுமன்றத்தின் ஒருமாதத்துக்கான மின்கட்டணம் 60 இலட்சமாக  காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் இத்தொகை மேலும் அதிகரிக்க கூடும். ஆகவே சூரிய சக்தியிலான மின்சக்தி திட்டத்தை பாராளுமன்றத்திலும் செயற்படுத்துவது அவசியமானதாகும். 



நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் மாகாண கல்வி திணைக்களங்களின் கூரைகளில் சூரிய சக்தியிலான மின்னுற்பத்திக்கான திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.



மின்கட்டண அதிகரிப்பினால் சகல பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 2013ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து மின்கட்டணம் குறைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.



மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்கட்டணத்தை அதிகரிக்காத காரணத்தினால் இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டது. மின்சார சபை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 80 பில்லியனையும் தேசிய மற்றும் ஏனைய மின் விநியோகஸ்தர்களுக்கு 45 பில்லியனையும் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.



நிதி நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னணியில் மாற்று திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வலியுறுத்தியது. வீட்டு மின்பாவனை அரச மற்றும் அத்தியாவசிய கட்டடங்கள் தொழிற்சாலைகள் மற்றும் மத தலங்கள் என நான்கு பிரிவுகளாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன.



கடந்த காலங்களில் மின்கட்டண அதிகரிப்பின் போது ஏனைய பிரிவுகளிடமிருந்து  கட்டணம் அறவிடப்பட்டு அதனூடாக மத தலங்களுக்கு நிவாரண கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு செயற்படுத்த முடியாது. ஏனெனில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.



நாட்டில் 48682 மத தலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடை மின்பாவனை மையங்கள் உள்ளன. புதிய மின்கட்டண திருத்தத்திற்கமைய 36000 ஆயிரம் மத தலங்களின் மின்கட்டணம் 3990 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.



மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது. ஆகவே மத தலங்கள் தமது மாத மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும்.



11 ஆயிரம் மத தலங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ள.



மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தின் ஊடாகவே நிலையான தீர்வு காண முடியும். புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களுக்கான தொழினுட்ப கருவிகளை இறக்குமதி செய்வது தற்போதை நிதி நெருக்கடிக்கு மத்தியில் சாத்தியமற்றது.



இந்தியா மற்றும் சீன கடனுதவி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களுக்கான கருவிகளையும் உபகரணங்களையும் இறக்குமதி செய்து அவற்றை குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.



மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது.நிதியமைச்சு அத்தீர்மானத்தை எடுத்தால் அதனை செயற்படுத்த தயார் என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

18 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

18 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை