Skip to main content

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய்!

Sep 20, 2022 66 views Posted By : YarlSri TV
Image

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய்! 

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாயை அண்மித்துள்ளமை தெரியவந்துள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி பதிலின்போதே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளது.



இதன்போது நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாய் எனவும் அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டார்.



அதற்குப் பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகரஇ நாடாளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே முக்கியம் என குறிப்பிட்டார்.



எவ்வாறாயினும் அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும் தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை