Skip to main content

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

Jun 12, 2022 176 views Posted By : YarlSri TV
Image

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா 

இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை( 6 பில்லியன்) நிவாரண கடனை வழங்கியுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.



எரிபொருளுக்காக அதிகளவான கடன்



இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா



 



இவற்றில் அதிகளவான கடன் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தொகை இலங்கைக்கு தேவையான அத்தியவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.



இலங்கை ஆசிய நாடுகளிடம் பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா



இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா



 



இதனை தவிர பல ஆசிய நாடுகளுக்கு இலங்கைக்கு செலுத்த வேண்டிய கூட்டு கடனை செலுத்துவதையும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது.



இதனடிப்படையில் இந்தியா, கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கைக்கு சுமார் 600 கோடி டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.



இதனிடையே கமத்தெழிலுக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்யவும் இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதுடன் அது சம்பந்தமான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.



அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்யவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை