Skip to main content

இலங்கையில் வெற்றிலை போடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!!

Apr 18, 2023 60 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் வெற்றிலை போடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!! 

வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ரோடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.



நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 48 வெற்றிலை பொதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் இந்த புற்று நோய் உண்டாக்கும் இரசாயனம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.



ரோடமைன் பி என்பது ஆடை மற்றும் காகித அச்சிடும் தொழில்களில் நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும், மேலும் இது களைக்கொல்லிகளை நிறமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் செயற்கை சாய இரசாயனமாகும். 



எனவே, உண்ணக்கூடிய சுண்ணாம்பில் நிறத்தை மாற்ற இதுபோன்ற இரசாயனத்தைப் பயன்படுத்துவது கடுமையான சமூகக் குற்றம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை