Skip to main content

தென்னிலங்கை அரசியலில் வெகுவிரைவில் ஏற்படப் போகும் மாற்றம்! பசிலின் பதவி விலகல் நாடகம்

Jun 12, 2022 160 views Posted By : YarlSri TV
Image

தென்னிலங்கை அரசியலில் வெகுவிரைவில் ஏற்படப் போகும் மாற்றம்! பசிலின் பதவி விலகல் நாடகம் 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ளமை பிறிதொரு அரசியல் நாடகமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 



அரசியலில் இருந்து பசில் ராஜபக்ச ஒருபோதும் ஓய்வு பெறமாட்டார். வெகுவிரைவில் அரசியல் ரீதியில் ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  



இரண்டு வருடங்களில் நான்கு அரசாங்கங்கள்



 



தென்னிலங்கை அரசியலில் வெகுவிரைவில் ஏற்படப் போகும் மாற்றம்! பசிலின் பதவி விலகல் நாடகம்



தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிறைவடைந்த இரண்டு வருட பதவி காலத்தில் நான்கு அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.



பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.



பெரும்பான்மை பலம் உள்ளது என்ற காரணத்தினால் ஜனாதிபதி உட்பட அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்த ஏனைய தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை.



மகிந்தவின் கருத்தை கேட்காத கோட்டாபய



 



 



தென்னிலங்கை அரசியலில் வெகுவிரைவில் ஏற்படப் போகும் மாற்றம்! பசிலின் பதவி விலகல் நாடகம்



முன்னாள் பிரதமர் மகிந்தவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.



சகல கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில் எவருக்கும் தெரியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.





நாட்டில் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும்.



பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற காரணத்திற்காக கட்சி அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்து, ஒருசில விடயங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.



அமெரிக்காவின் தேவைக்காக செயற்படும் ரணில்



 



தென்னிலங்கை அரசியலில் வெகுவிரைவில் ஏற்படப் போகும் மாற்றம்! பசிலின் பதவி விலகல் நாடகம்



இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்கமைய செயற்படுகிறார்.



பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில்   குறிப்பிடுகிறாரே தவிர நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித தீர்வையும் அவர் முன்வைக்கவில்லை.





சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து வேறு மாற்று திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ளமை பிறிதொரு அரசியல் நாடகமாகும். அரசியலில் இருந்து அவர் ஒருபோதும் ஓய்வு பெறமாட்டார். வெகுவிரைவில் அரசியல் ரீதியில் ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை