Skip to main content

ஜம்மு காஷ்மீரில் கல்விக்கொள்ளையை மறுசீரமைப்பதற்காக பயிற்சிப்பட்டறை!

Oct 13, 2022 77 views Posted By : YarlSri TV
Image

ஜம்மு காஷ்மீரில் கல்விக்கொள்ளையை மறுசீரமைப்பதற்காக பயிற்சிப்பட்டறை! 

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்களையும் கல்வியறிவு பெறச்செய்வதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் 'புதிய இந்தியாவுக்கான எழுத்தறிவு திட்டம்' ஸ்ரீநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



பள்ளத்தாக்கில் உள்ள ஹமிடி காஷ்மீரி நினைவுக் கல்லூரியுடன் இணைந்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறையை ஆரம்பித்துள்ளது.



இந்தப் பயிற்சிப் பட்டறையின் போதுஇ தயாரிக்கப்பட்ட வரைவு ஜம்மு காஷ்மீர், காஷ்மீரி, உருது, இந்தி மற்றும் டோக்ரி ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு செயன்முறைச் சாத்தியங்கள் குறித்த ஆராய்வு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆரம்ப அமர்வுக்கு காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி அமைப்பின் உருது துறைத் தலைவர் அல்தாஃப் அஞ்சும் தலைமை வகித்தார்.



ஆரம்ப அமர்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமன் ஆரா கான், பட்டறையின் நோக்கங்கள் மற்றும் நோக்கங்களை விளக்கினார் அதன் பிறகு அதை தரை மட்டத்தில் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



இரண்டாவது அமர்வின் நடவடிக்கைகளில் உருது, இந்தி, காஷ்மீரி மற்றும் டோக்ரி ஆகிய நான்கு மொழிகளின் குழுக்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டத் தொகுதியைத் தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.



ஜிடிசி ஈத்காவின் உதவிப் பேராசிரியரும் ஸ்ரீநகரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஷா பைசல் இந்த பட்டறைக்கு துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.



அவர்கள் இந்தப் பட்டறையின் நோக்கத்தை உறுதி செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.



இந்நிகழ்வில் அல்தாப் அஞ்சும் மற்றும் சமன் ஆரயா கான் ஆகியோருக்கு ஹமிடி காஷ்மீரி பட்டயக் கல்லூரியினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை