Skip to main content

யாழில். காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்டம்!

Sep 30, 2022 65 views Posted By : YarlSri TV
Image

யாழில். காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்டம்! 

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது  10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன.



அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருள் மீட்கப்பட்டன.



குறித்த இரு பொது சுகாதார பரிசோதகர்களினாலும் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.



வழக்கு விசாரணையின் போது 11 கடை உரிமையாளர்களும் தமது குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து மன்றினால் உரிமையாளர்களுக்கு மொத்தமாக 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை