Skip to main content

மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா!

Apr 14, 2022 95 views Posted By : YarlSri TV
Image

மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா! 

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.



உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும், கீவ் நகருக்கு வந்து ஆதரவு தெரிவித்த நேட்டோ நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.



ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.



நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றின் அதிபர்களான ஆண்ட்ர்செஜ் துடா, கிடானஸ் நவ்சேடா, எகிலிஸ் லெவிட்ஸ், அலார் காரிஸ் ஆகியோர் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.



உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.



இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது.



ஏற்கனவே உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.



 



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை