Skip to main content

இலங்கையில் ஆடைகளின் விலை சடுதியாக உயர்வு!

Mar 30, 2022 88 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் ஆடைகளின் விலை சடுதியாக உயர்வு! 

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்துள்ளார்.



மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு தைத்த ஆடைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.



குறிப்பாக மஹரகம பமுனுவ பகுதியில் புத்தாண்டு காலத்தில் 200, 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தைத்த ஆடைகள் தற்பொழுது 800 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.



தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



600 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நூல் இன்று 1800 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிறு ஆடை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத் தடையினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை