Skip to main content

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெருந்தொகையை பாக்கி வைத்துள்ள பாதுகாப்பு அமைச்சு

Jun 02, 2022 81 views Posted By : YarlSri TV
Image

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெருந்தொகையை பாக்கி வைத்துள்ள பாதுகாப்பு அமைச்சு 

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய 5 ஆயிரத்து 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.



அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.



உத்தியோகபூர்வ இல்லங்கள்



நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக வழங்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குதற்கான மானியத்தை ஒதுக்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டது.



இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 6 ஆயிரத்து 141 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதில் 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை