Skip to main content

பெண்களே! மாதவிடாய் நாட்களில் மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க

May 31, 2022 63 views Posted By : YarlSri TV
Image

பெண்களே! மாதவிடாய் நாட்களில் மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க 

காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பல வகையான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.



அந்தவகையில் தற்போது நாட்களில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   



பெண்களே! மாதவிடாய் நாட்களில் மறந்து கூட  இந்த தவறை செய்யாதீங்க




  • உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.

     

  • உங்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடு மாற்றுவது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு அலர்ஜி மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்கும். 

     

  • மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். எனவே பீரியட்ஸ் சமயத்தில் வாக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.  

     

  • மாதவிடாய் காலத்தில் ரத்தபோக்கின் ஸ்மெல்லைத் தடுக்க பலரும் வாசனை திரவியங்கள் அல்லது நறுமணமிக்க தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் பிறப்புறுப்பில் சென்சிடிவ் பகுதியை பாதிக்கும். 

     

  • ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன நிலையில் அடக்கடி மாற்றங்கள், எரிச்சல், கோபம் என்று அனைத்துமே மாதவிடாய் நாட்களில் உங்களை பாதிக்கும். எனவே, நல்ல தூக்கம் அவசியம்.

     

  • மாதவிடாய் நாட்களின் போது நிறைய காஃபி குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். காஃபீன் உடலின் நீர்ச்சத்தை குறைப்பதோடு, பீரியட்ஸ் வலியையும் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து, மாதவிடாய் நாட்களில் ஜன்க் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  



 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை