Skip to main content

குரங்கம்மை பரவல் அபாயம்... செல்லப்பிராணிகளை கொல்ல திட்டம்

May 28, 2022 77 views Posted By : YarlSri TV
Image

குரங்கம்மை பரவல் அபாயம்... செல்லப்பிராணிகளை கொல்ல திட்டம் 

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளான வெள்ளெலிகள், ஜெர்பில்ஸ் மற்றும் கினிப் பன்றிகளை விட்டு விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் விலங்குகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதால், அரசாங்க ஆய்வகங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



பிரித்தானியா முழுவதும் தற்போது 100-க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 16 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இங்கிலாந்தில் மட்டும் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று UK Health Security Agency (UKHSA) தெரிவித்துள்ளது.



குரங்கம்மை பரவல் அபாயம்... செல்லப்பிராணிகளை கொல்ல திட்டம்



 



மேலும், குரங்கம்மை தொற்றாளர்கள் 21 நாட்களுக்கு அல்லது வைரஸிலிருந்து விடுபடும் வரை பாலூட்டி செல்லப்பிராணிகளுடன் தொடர்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



மட்டுமின்றி, செல்லப்பிராணிகள் குரங்கம்மை தொற்றின் காரணியாக மாறக்கூடும் எனவும், இது ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் எனவும் ECDC எச்சரிக்கை விடுத்துள்ளது.



கட்டுப்பாடுகளை மீற நேர்ந்தால், கட்டாயம் செல்லப்பிராணிகளை கொல்லும் நிலை உருவாகலாம் எனவும் எச்சரித்துள்ளனர். 2003ல் செல்லபிராணிகளால் 81 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டதாக அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை