Skip to main content

விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை

May 27, 2022 53 views Posted By : YarlSri TV
Image

விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை 

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய துருப்புகள், அடுத்து பேரல் வெடிகுண்டுகளை வீசலாம் எனவும், பேரல் குண்டுகள் மனித உடல்களை சிதறடிக்கும் எனவும் சிரியா மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக 50க்கும் மேற்பட்ட 'பேரல் வெடிகுண்டு நிபுணர்கள்' ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.



பேரல் குண்டுகள் பொதுவாக எண்ணெய் பீப்பாய்கள், எரிவாயு உருளைகள் உள்ளிட்டவையில் வெடிபொருளை நிரப்பி, அதில் குளோரின் உட்பட பாதிப்பை அதிகரிக்கும் பொருட்கள் கலந்து தயாரிப்பார்கள்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



குறித்த மலிவான குண்டுகளை ஹெலிகொப்டர்களில் இருந்து வீச முடியும். 2012ல் இதுபோன்ற பேரல் குண்டுவீச்சில் சுமார் 11,000 அப்பாவி சிரிய மக்கள் கொல்லப்பட்டனர்.



குறித்த தாக்குதலில் இருந்து தப்பிய சிரியா மருத்துவர் ஒருவர் தற்போது உக்ரைன் மக்களை எச்சரித்துள்ளார். விளாடிமிர் புடினை பேரல் குண்டு ஜனாதிபதி என அடையாளப்படுத்தியுள்ள அந்த மருத்துவர், விளாடிமிர் புடினுக்கு பெண்கள், சிறார்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் என எந்த பாகுபாடும் இல்லை எனவும், அவருக்கு மரணத்தின் கோர முகம் எனவும் சாடியுள்ளார்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



சிரியா நகரங்களில் முன்னெடுத்த கொடூரங்களை அவர் தற்போது உக்ரைன் நகரங்களில் செய்துவருவதாக குறிப்பிட்ட மருத்துவர், உண்மையில் அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார்.



சிரியாவின் அலெப்போ நகரில் ஒரே மாதத்தில் மட்டும் 83 பேரல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் அதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



ரஷ்யாவின் ஆலோசனைகளின் அடிப்படையில் சிரியா இராணுவம் பேரல் குண்டுகளையே அதிகமாக பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது. தற்போது அதே சூழலை உக்ரைன் நகரங்களும் எதிர்கொள்ள இருக்கிறது என்கிறார் அந்த மருத்துவர்.



பேரல் குண்டுகள் மலிவான ஆயுதம் மட்டுமின்றி, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்கிறார் அவர். மனித உடல்கள் சிதைந்து சின்னாபின்னமாகும் எனவும், உயிர் தப்பினாலும் அடையாளம் தெரியாமல் போய்விடும் என பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்த மருத்துவர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை