Skip to main content

மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

May 18, 2022 65 views Posted By : YarlSri TV
Image

மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 

உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்குள் மறைந்திருந்த வீரர்களை வெளியேற்ற சம்மதித்த ரஷ்யா, அவர்களை உக்ரைன் வீரர்களிடம் பிடிபட்ட ரஷ்யப் படையினருக்கு பதிலாக, உக்ரைனிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தது.



ஆனால், செய்த ஒப்பந்தத்தை மீறி, இப்போது தங்களிடம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விட மறுத்துவிட்டது ரஷ்யா.



அத்துடன், ரஷ்யப் படைகளிடம் சிக்கியுள்ள உக்ரைன் படைவீரர்களை நாஸி போர்க் குற்றவாளிகள் என ரஷ்யா விமர்சித்துள்ளதுடன், அவர்களை உக்ரைனிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்றமும் அறிவித்துள்ளது.



மரியூபோலில் இருந்து உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னமும் ரஷ்ய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.



மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை... அம்பலமான ரஷ்யாவின் துரோகம்



 



இந்நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற தலைவரான Vyacheslav Volodin என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்களை உக்ரைனிடமிருக்கும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக விடுவிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.



அத்துடன், உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவரான அவரது சக நாடாளுமன்ற உறுப்பினரான Leonid Slutsky என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் படையினர் மனித உருவம் கொண்ட மிருகங்கள் என்றும், அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை