Skip to main content

இம்ரான்கான்......மஹிந்தவை தொடர்ந்து அடுத்து பதவி இழப்பது பிரதமர் மோடியா?

May 11, 2022 65 views Posted By : YarlSri TV
Image

இம்ரான்கான்......மஹிந்தவை தொடர்ந்து அடுத்து பதவி இழப்பது பிரதமர் மோடியா? 

  இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் அடுத்து நரேந்திர மோடி தான் பிரதமர் பதவியை இழப்பார் எனும் வகையில் கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா போட்டோ ஒன்றை வெளியிட்டு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏறக்குறைய நாடு திவாலாகி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வரும் நிலையில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கம் பதவி விலகவேண்டும் என கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.





எனினும் கோட்டபாய பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்தொடர்ச்சியாக ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் பொதுமக்களின் அமைதி போராட்டத்தில் நுழைந்து சதிச்செயல்களை அரங்கேற்றினர். இதனால் வன்முறை வெடித்தது.





இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ராஜபக்சேக்களின் பங்களாக்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இலங்கை போர் களமாக மாறியுள்ள நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த வரும் 12ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், 'எச்சரிக்கையுடன் இருங்கள்' என பதிவிட்டுள்ளார்.



இதன்மூலம் பாகிஸ்தான், இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி இந்தியாவிலும் நடக்கலாம் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.



அதேசமயம் அவரது பதிவில் போட்டோ ஒன்றையும் சித்தராமையா பகிர்ந்துள்ளார். அதில் முதலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் படம் உள்ளது. இரண்டாவதாக இலங்கையின் மகிந்த ராஜபக்சேவின் படம் உள்ளது. 3வது இடத்தில் படம் எதுவும் இல்லை. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியாகலாம் என்பதை குறிக்கும் வகையில் அவர் இதை பதிவிட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது.





ஏனெனில் தவறான பொருளாதார கொள்கையால் ஒரு தரப்பு மக்கள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவளித்த சிறுகட்சிகளின் எம்பிக்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தனர். இதனால் இம்ரான்கான் பெரும்பான்மையை இழந்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியை பறிகொடுத்தார்.



அதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



இந்த வரிசையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் இணையலாம் என்பதை குறிக்கும் வகையில் தான் சித்தராமையா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை