Skip to main content

காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்

May 11, 2022 81 views Posted By : YarlSri TV
Image

காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம் 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



திருகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில் உள்ள கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென குறித்த ஊடகத்தின் உள்ளக பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.



மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் Pillow House மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.





நேவி ஹவுஸ் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் Pillow House மாளிகை காட்டில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன.



Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மஹிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.





திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ராஜபக்ச அணியினர் இரண்டு உலங்கு வானூர்திகளில் கட்டுநாயக்காவிற்கு வருவதாக கூறி மக்களை குழப்பியுள்ளனர். இதனால் கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை திசைதிருப்பிவிட்டு மகிந்த உள்ளிட்ட குழுவினர் இந்த மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷவின் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகின்றது.





மகிந்த இந்திய உலங்கு வானூர்தியில் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், சமுத்ரா என்ற கப்பலில் இந்தியாவுக்கு அவரை அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறி மக்களை திசை திருப்பியுள்ளனர்.



இதற்கிடையில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட நாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் என குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மகிந்தவை காப்பாற்றும் திட்டங்களாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை