Skip to main content

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை ஓட ஓட துரத்தியடிக்கும் சூப்... ஐந்தே நிமிடத்தில் தயாரிப்பது எப்படி

May 09, 2022 61 views Posted By : YarlSri TV
Image

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை ஓட ஓட துரத்தியடிக்கும் சூப்... ஐந்தே நிமிடத்தில் தயாரிப்பது எப்படி 

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.



கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல.



கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.



தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.



அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது.



சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.



இத்தகைய நன்மைகள் கொண்ட கேரட்டினை கொண்டு ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.





தேவையான பொருட்கள்




  1. கேரட் - 6

  2. தக்காளி - 1

  3. பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

  4. மிளகு தூள் - தேவையான அளவு

  5. உப்பு - தேவையான அளவு

  6. கரம் மசாலா தூள் - சிறிது

  7. வெண்ணெய் - தேவையான அளவு

  8. கொத்தமல்லி - சிறிது



செய்முறை



முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.



கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.





 



ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.



பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.



சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை