Skip to main content

பூண்டை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மைகள் இவையா?

Jan 22, 2022 114 views Posted By : YarlSri TV
Image

பூண்டை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மைகள் இவையா?  

சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதில், பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.



மேலும், பூண்டுகளில் ஒருதலை பூண்டு, மலை பூண்டு, தரை பூண்டு, நாட்டு பூண்டு, தைவான் அல்லது சைனா பூண்டு என்று பல வகைகளில் உண்டு.



தாய்பால் அதிகம் சுரக்க பூண்டை வேகவைத்து பாலில் கலந்து சாப்பிடுவார்கள். பாலில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.



சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டுக்குள் வராமல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.



பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.  


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை