Skip to main content

கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது: இரா.துரைரெத்தினம்

May 03, 2022 82 views Posted By : YarlSri TV
Image

கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன்வராது: இரா.துரைரெத்தினம் 

உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் பலவீனமான திட்டங்களும், நிருவாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன் வராது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,



ஜனாதிபதியின் வருகைக்குப் பின், நாடாளுமன்ற புதிய மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கத்தின் பின் கோவிட் காரணமாகவும், இங்கு நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு, சர்வதேசத்தின் இலங்கை தொடர்பான நம்பிக்கையீனம், நாட்டை ஆளுவதற்கு நிதிப்பற்றாக்குறை, வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன்சுமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம், விவசாயத்திற்கான யூரியா, கிருமிநாசினியை இல்லாமல் செய்தமை போன்ற சூழ்நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்ற நிலையில் இலங்கை அரசு செய்வதறியாது திகைப்படைந்து நிற்கின்றது.





இந்த நிலையில் கோவிட் காரணமாக டொலர் தட்டுப்பாடு, நிதிப் பற்றாக்குறை, அரசாங்கத்தின் மோசடி ஆட்சிமுறை, வெளிநாடுகளின் அழுத்தங்கள், அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் போன்றவற்றினால் நாட்டை புதிய அரசு ஆட்சி செய்ய முடியாமலுள்ளது.



இந்நிலையில் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த அரசுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மூவின மக்களும் கட்சி பேதமின்றி, இனமத பேதமின்றி வரலாற்றில் இல்லாதவாறு அரசுக்கு எதிராக வெகுஜன ரீதியான போராட்டங்களை முடக்கி விட்டுள்ளனர்.



இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை இழந்த அரசு எதிர்க்கட்சிகளின் பலவீனங்களும், வெளிநாடுகளின் தலையீடுகளினாலும் முழுமையாக இந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் மக்களின் நலன்களுக்காகப் பேசி தங்களின் நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றது.



இலங்கையின் நிலைமைகளைப் பரிசீலனை செய்து பொருளாதார ஒப்பந்தங்கள், ஏனைய இலங்கை மக்கள் நலன்கள் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கான நல்லாட்சிக்கான,திறமையான ஒரு கட்டமைப்பு அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும் இருப்பது அவசியமாகும்.





அப்படி ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உதவி செய்து வருகின்ற, உதவி செய்யப் போகின்ற நாடுகள், நிதி நிறுவனங்கள், அமைப்புக்கள் நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவிகளைச் செய்யும்.



எது நடக்கின்றதோ, இல்லையோ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, நிர்வாகமாக இருந்தாலும் சரி உதவி புரிகின்றவர்களில் உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் பலவீனமான திட்டங்களும், நிருவாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன் வராது.



மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டு ஆட்சியாளர்களுக்கெதிராக போராட்டம் நடாத்தி அது வன்முறையாக மாறி வன்முறை வளர்த்து இறுதியில் கலவரம், இனக்கலவரம், இராணுவ ஆட்சி, சதிப்புரட்சி வரையும் கொண்டு செல்லும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை