Skip to main content

நான் அதிபராக இருந்தால் ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் - டிரம்ப்

Apr 27, 2022 72 views Posted By : YarlSri TV
Image

நான் அதிபராக இருந்தால் ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் - டிரம்ப் 

உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம்புவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது உலகை பேரழிவின் விளிம்பிற்கு தள்ளியது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 



 நட்பற்ற நாடுகளில் எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷிய அதிபர் புதினின் கடந்த மாதம் 25ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.



ரூபிள்களில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தங்கள் நாடுகளில் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது என போலந்து மற்றும் பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன் என தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை