Skip to main content

உங்க வீட்டுல ரவை இருந்தா இப்படி செய்து சாப்பிடுங்க! ருசியான பலகாரம்

Feb 24, 2022 75 views Posted By : YarlSri TV
Image

உங்க வீட்டுல ரவை இருந்தா இப்படி செய்து சாப்பிடுங்க! ருசியான பலகாரம் 

ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியான ரெசிபி தான் “ரவை சோமாஸ்”.



இதன் செய்முறை விளக்கம்,



தேவையானவை:



மேல் மாவுக்கு: மைதா - அரை கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



பூரணத்துக்கு: ரவை - அரை கப், துருவிய கொப்பரை தேங்காய் - கால் கப், பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள் - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - 10 முதல் 15, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.



செய்முறை



எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.



ஒரு டீஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். மீதி நெய்யில் தேங்காய், முந்திரி, திராட்சையை வறுக்கவும்.



ஆறிய பிறகு ஏலக்காய்த் தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.



பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன பூரிகளாக இட்டு, நடுவில் இந்த பூரணத்தை வைத்து, தண்ணீர் தொட்டு மடித்து அரை வட்டமாக மூடவும். எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சோமாஸ் ரெடி


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை