Skip to main content

பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்!

Feb 13, 2022 63 views Posted By : YarlSri TV
Image

பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்! 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கவலரமாக மாறியது.



கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர்ப்புகை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், கனடாவில் முன்னெடுக்கப்படும் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போன்றதொரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.



சுமார் 7000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தும், பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்துள்ளது. சம்பவப்பகுதியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனுமதி அளிக்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுக்க தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் அவர்களை வாகனங்கள் இல்லாமல் மற்றவர்களால் ஆதரிக்கப்படுகிறார்கள்.



சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் முறியடிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் நகரில் நுழைய முயன்ற சுமார் 5 வாகன பேரணியை பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன், 200கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.



மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 54 பேர்களை பாரிஸ் நகரில் மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். இரவு 8 மணி கடந்தும் கூட்டம் கலையாத நிலையில் பொலிசார் கண்ணீர்ப்புகை வீசியுள்ளனர்.



இதனிடையே, சோம்ப்ஸ் எலிசே பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த மோதல் வெடித்துள்ளது. பல எண்ணிக்கையிலான வாகனங்களை சோம்ப்ஸ் எலிசே பகுதியில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அங்கு காவல்துறையினர் முன்னாதாகவே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்கார்களை காவல்துறையினர் கலைந்துபோக பணித்தபோதும், அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.



இதனால் காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர். அதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



இதில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 337 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை