Skip to main content

கனடா - அமெரிக்கா இடையிலான முக்கிய எல்லையை முடக்கிய லொறி சாரதிகள்

Feb 11, 2022 77 views Posted By : YarlSri TV
Image

கனடா - அமெரிக்கா இடையிலான முக்கிய எல்லையை முடக்கிய லொறி சாரதிகள் 

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறி சாரதிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



குறித்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பத்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறி சாரதிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



கனடா தலைநகர் ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லொறி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், குறித்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபடும் லொறிகள் மற்றும் அதன் சாரதிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வணிக நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.



தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லொறி சாரதிகள் தற்போது முக்கிய சாலைகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதற்கமைய,அம்பாசிடர் பாலம் மட்டுமின்றி மொன்டானா மற்றும் ஆல்பர்ட்டா இடையே மற்றொரு எல்லைக் கடக்கும் சாலையும் முடக்கப்பட்டுள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை