Skip to main content

ஆக்கிரமிக்கப்பட்ட “உக்ரைன்” பிராந்தியம் ஒன்றில் “ரஸ்யா” சந்தித்துள்ள முதல் நிர்வாக தோல்வி!

Mar 13, 2022 87 views Posted By : YarlSri TV
Image

ஆக்கிரமிக்கப்பட்ட “உக்ரைன்” பிராந்தியம் ஒன்றில் “ரஸ்யா” சந்தித்துள்ள முதல் நிர்வாக தோல்வி! 

ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வாகத்துக்கு முதல் நிர்வாக தோல்வி ஏற்பட்டுள்ளது.



ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கெர்சன் உள்ள பிராந்தியசபை, தமது நகரம் உக்ரைனிய நாட்டிலேயே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்துக்காக வாக்களித்துள்ளது.



பிரிந்து செல்லும் ‘மக்கள் குடியரசை’ உருவாக்குவதற்கு ரஸ்யா போலியான வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.



சபையின் துணைத் தலைவரான யூரி சோபோலெவ்ஸ்கி,தமது இன்ஸ்டாகிராம் பதிவில்,கெர்சன் பிராந்தியம் உக்ரைனுக்கு உரியது என்ற யோசனையை 44 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்



கெர்சன் பிராந்தியத்தில் 'மக்கள் குடியரசை” உருவாக்கி உக்ரைனின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் ரஸ்யாவின் முயற்சிகளை பிரதிநிதிகளால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை