Skip to main content

ஒருமுறை இப்படி சுவையான நாட்டுக் கொத்தமல்லி சட்னி அரைத்து, அதனை இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப்பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்

Feb 07, 2022 65 views Posted By : YarlSri TV
Image

ஒருமுறை இப்படி சுவையான நாட்டுக் கொத்தமல்லி சட்னி அரைத்து, அதனை இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப்பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும் 

தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு சட்னி செய்வது வழக்கமான விஷயம் தான். அப்படி பலரது வீட்டிலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி இதுபோன்ற சட்னி வகைகளை தான் பெருமளவில் செய்து கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகள் தினமும் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அவர்களுக்கு சற்றே சலிப்பாக தான் இருக்கும். எனவே அவர்கள் விரும்பும் வகையில் பார்ப்பதற்கு நல்ல நிறத்துடனும், சுவையாகவும் இருக்கும் இந்த கொத்தமல்லி சட்னியை ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள். இதில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்து அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் இது போன்ற கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதனைப் பார்த்த உடனே மிகவும் ஆர்வமாக சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். குழந்தைகள் சாப்பிடும் வகையில் இதன் சுவையும் அற்புதமாகவே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.




தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி – இரண்டு கட்டு, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, வர மிளகாய் – 8, இஞ்சி சிறிய துண்டு – 1, தக்காளி – 2, கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய் – அரை மூடி, எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.



- Advertisement -



செய்முறை:

முதலில் இரண்டு கட்டு கொத்தமல்லியை அதன் வேர் பகுதியை அகற்றிவிட்டு, அவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். அதன்பின் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.



kothamalli



பின்னர் 2 தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும். வரம் மிளகாயைக் காம்பு கிள்ளி வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் இஞ்சி, வெங்காயம், தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.



 



பிறகு இவற்றுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் கொத்தமல்லி தழை லேசாக சூடானதும், அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து, அனைத்தையும் கிளறி விட்டு, சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.



onion-rice1



பிறகு அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் துருவல் மற்றும் ஆற வைத்துள்ள மசாலாவையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.



 



Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை