Skip to main content

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா மீண்டும் பொதுவெளியில்!

Jan 20, 2021 202 views Posted By : YarlSri TV
Image

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா மீண்டும் பொதுவெளியில்! 

அலிபாபாவின் நிறுவனரும், சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா காணாமல் போனது குறித்த பல மாத ஊகங்களைத் தொடர்ந்து, தற்போது அவர் மீண்டும் பொதுவெளியில் தோன்றியுள்ளார். 



இன்று அவர் ஒரு ஆன்லைன் மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்களிடையே உரையாற்றினார் என சீனாவிலிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



கிராமப்புற கல்வியாளர்களின் சாதனைகளை அங்கீகரிக்க ஜாக் மா நடத்தும் வருடாந்திர நிகழ்வில் அவர் கலந்து கொண்டதாக முதலில் ஒரு உள்ளூர் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களால் இது உறுதிப்படுத்தப்பட்டது.



கடந்த நவம்பரில் ஜாக் மா திடீரென காணாமல் போனது பல்வேறு சர்ச்சைகளைத் தூண்டியது. அவர் காணாமல் போனது குறித்து தினம் தினம் புதிய அறிக்கைகள் வெளிவந்தன.



 முதன்முதலில் கடந்த ஆண்டு ஷாங்காயில் ஒரு வணிக மாநாட்டில் ஜாக் மா ஆற்றிய உரை சீன அரசை விமர்சிக்கும் வகையில் இருந்தது. சீன துணைத் தலைவர் வாங் கிஷனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போதிலிருந்து ஜாக் மாவை கட்டம் கட்டும் பணியை சீன அரசு தொடங்கியிருந்தது.



ஜாக் மாவின் அப்போதைய உரையைத் தொடர்ந்து, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் தனது உலகின் மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையான 39.7 பில்லியன் அமெரிக்க டாலர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆண்ட் குழுமத்தின் பங்கு வெளியீட்டை நிறுத்தியது. இது சீனாவின் ஈ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.



அப்போதுதிருந்து ஜாக் மாவை வீழ்த்தும் பணிகள் சீன அரசால் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில அறிக்கைகள் ஜாக் மா தற்போதைக்கு தலைமறைவாக இருப்பதாகக் கூறின.



ஆனால் அலிபாபா தலைமையகமாக விளங்கும் ஹாங்க்சோவில் ஜாக் மா இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சாரார் தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் ஜாக் மா மீண்டும் பொதுவெளியில் தோன்றியிருப்பது தொடர்ச்சியான வதந்திகளைத் தணிக்க உதவக்கூடும். அதே நேரத்தில் சீனா டைட்டன் ஆண்ட் குரூப் கோ மற்றும் அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் ஆகியவற்றில் விசாரணைகளைத் தொடர்கிறது.



56 வயதான ஜாக் மா 2019’ஆம் ஆண்டில் அலிபாபாவின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் அலிபாபா பார்ட்னர்ஷிப்பின் ஒரு பகுதியாகும். இது 36 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். நிறுவனத்தில் மிகப்பெரும் அளவில் பங்குகளைக் கொண்டுள்ளதால் ஜாக் மா தொடர்ந்து அதன் இயக்குநர்கள் குழுவில் பெரும்பான்மையை பரிந்துரைக்கும் உரிமை கொண்டவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை