Skip to main content

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் கோரிய இலங்கை: எதற்கு தெரியுமா?

Feb 07, 2022 82 views Posted By : YarlSri TV
Image

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் கோரிய இலங்கை: எதற்கு தெரியுமா? 

அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் கடன் வசதியை இலங்கை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.



குறித்த கடனை பயன்படுத்தி நாட்டின் பிரதானமாக பருப்பு மற்றும் பார்லி ஆகியவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.



இதேவேளை, மீதமுள்ள பணத்தில் ஏனைய அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டிற்கு தேவையான பருப்பு மற்றும் பார்லியை அவுஸ்திரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.



இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலம் மற்றும் அடுத்து வரும் மாதங்களுக்கு நாட்டிற்கு தேவையான அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் கடன் உதவி கிடைக்க உள்ளது.



குறித்த தொகையானது அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய போதுமானதாக இருக்கும். இதனை தவிர சீனாவிடம் 10 லட்சம் மெற்றி தொன் அரியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை