Skip to main content

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை - மு.க.ஸ்டாலின்

May 30, 2022 93 views Posted By : YarlSri TV
Image

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை - மு.க.ஸ்டாலின்  

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



சென்னை தேனாப்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி  A++ தரச்சான்று பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான தரச்சான்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.  பின் மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:  நீத்பதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரிக்கு வந்தது மகிழ்ச்சியாளிக்கிறது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த நிலையில், 3 மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன.



அந்த மூன்று கல்லூரிகளுமே பெண்களுக்கான கல்லூரி தான். கல்லூரிக்கான பாராட்டு விழா என்று என்னை அழைத்துவிட்டு, எனக்கும் சேர்த்து ஒரு பாராட்டு விழாவை நடத்திவிட்டீர்கள்.  NAAC அமைப்பால் A++ தகுதி பெற்றமைக்கு நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரிக்கு வாழ்த்துகள்.



எனக்கு இந்த கல்லூரி புதிது அல்ல, தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இந்த கல்லூரிக்கு வந்துதான் வாக்களிப்பேன், நான் முதலமைச்சராக உள்ள நிலையில், அந்த வெற்றிக்கான வாக்குகள் செலுத்திய இடங்களுள் இதுவும் ஒன்று. ஆண்களுக்கென பல கல்லூரிகள் இருந்த நிலையில், இஸ்லாமிய பெண்களுக்கான கல்லூரியாக இந்த கல்லூரி உருவெடுத்துள்ளது. ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லூரி இது. கல்லூரிக்கு A++ தகுதி ஒரு மைல் கல். நான் எந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் தட்டாமல் கலந்துகொள்பவர் பர்வீன் சுல்தானா. அவர் என்னை இந்த நிகழ்ச்சிக்கு உரிமையோடு அழைத்தார், நானும் இன்று தட்டாமல் கலந்து கொண்டுள்ளேன், பக்கத்து தெருக்காரன் என்ற உரிமையோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். 7,500 மாணவியர் பயிலும் கல்லூரியில் 50% இஸ்லாமியர், 50% பிற்படுத்தப்பட்ட, பட்டியலின,



ஏழை எளிய மாணவியர் என்றும்  மதச்சார்பற்ற கல்லூரியாக இது உள்ளது. இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது தான். அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது என்றார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை