Skip to main content

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

Feb 07, 2022 74 views Posted By : YarlSri TV
Image

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு 

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன (L.M.D Dharmasena) தெரிவித்தார்.



நாளைய பரீட்சைக்கு 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.



இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்காகவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காகவும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் 29 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.



அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்து தமது பரீட்சை இலக்கங்களுக்கு ஏற்ப ஆசனங்களை அடையாளம் காணுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.



பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு செல்லும்போது, தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் பரீட்சை அனுமதி அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை