Skip to main content

சிமெந்து இறக்குமதி செய்யும் 35 நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு

Feb 02, 2022 80 views Posted By : YarlSri TV
Image

சிமெந்து இறக்குமதி செய்யும் 35 நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு 

இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சிமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.



நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.



இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு இலட்சம் சிமெந்து பொதிகள் தேவைப்படுகின்றன. உள்நாட்டில் நான்கு இலட்சம் சிமெந்து பொதிகள் வழங்கப்படுகின்றன. தேவையான மீதமுள்ள இரண்டு இலட்சம் சிமெந்து பொதிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டும்.



எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.



இதேவேளை இலங்கையில் சிமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்து வருவதாக கட்டுமாண தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.     


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை