Skip to main content

பொலிஸ் அமைச்சருக்கு, எதிராக ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டு

Jan 27, 2022 98 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் அமைச்சருக்கு, எதிராக ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டு 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarath Weerasekara) எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்க மூன்று முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றமை சம்பந்தமாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



கொஸ்கமை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றியமையை உதாரணமாக காட்டியுள்ளதுடன் இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், தன்னால், பொலிஸ் துறையில் ஒழுக்கத்தை பாதுகாப்பது சிரமம் என பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.



அமைச்சர் சரத் வீரசேகர கோவிட் தொற்று காரணமாக தற்போது அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி இது சம்பந்தமாக முடிவு ஒன்றை எடுப்பார் என பொலிஸ் திணைக்களத்தில் பலர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை