Skip to main content

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இதுவே இறுதி வழி!

Jan 23, 2022 79 views Posted By : YarlSri TV
Image

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இதுவே இறுதி வழி!  

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



அதிலும் ஒமிக்ரோன் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



மதிப்பீட்டின்படி தொற்றில் 30வீத அதிகரிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.



ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் மாறுபாடு என்று கண்டறியப்பட்டுள்ளபோதும், அதன் பரவலை, சுகாதார முறைகளை கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்தமுடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.



மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை சிறுவர்கள் மத்தியில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.



நேற்றைய நிலவரப்படி 40 சிறுவர்கள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



எனினும் இதில் எத்தனைப்பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.



இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 78பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து இலங்கையில் இதுவரை ஒமிக்ரோனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை