Skip to main content

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சர்..

Jan 23, 2022 94 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சர்.. 

இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmed) இலங்கை சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார் மனித உரிமைகள் தொடர்பிக இலங்கை அரசின் நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக இருப்பதாக அஹமட் கூறினார்.



இந்த முன்னேற்றம் தொடர்ந்தால் இலங்கை அரசே அனைத்து மனித உரிமை விடயங்களுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டி காட்டினார். சுகாதார துறை பணியாளர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.



இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க பல்வோறு இனங்களை சாரந்த முதலீட்டாளர்களை பிரித்தானிய ஊக்குவிக்கும் எனவும் அஹமட் குறிப்பிட்டார். இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்காலாம்? அவர் வேறு யாரும் அல்ல - கடந்த வருட இறுதியில் தமிழரசு கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் , சாணக்கியன் ஆகியோரை பிரித்தானியாவில் சந்தித்து, சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்தல், மனித உரிமைகளை நிலைநிறுத்தல், மோதலுக்கு பிந்தையான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக கரிசனையோடு கலந்துரையாடி செய்தி வெளியிட்டார்களே அதே தாரிக் அஹமட் தான் இவர்.



இலங்கை அரசின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் அஹமட் இன் கருத்திற்கு வலிந்து காணமல் ஆக்கபட்டடோர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.





அச்சங்கம் அஹமட் இற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எம் மக்களின் பிரச்சனையை இலங்கை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்று எந்த அடிப்படையில் தெரிவித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.



ஐ.நா வின் அறிக்கையின் பிரகாரம் அதிகளவில் வலிந்து காணாமல் ஆக்கபடல் சம்பவம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவதாக உள்ளது. மனித உரிமை மீறல்களில் தொடர்சியாக இலங்கை அரசு ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.



இவை தொடர்பாக எதுவும் உங்கள் அறிக்கையில் குறிப்பிட படவில்லை. மாறாக இலங்கை அரசுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதர திட்டங்களை அமுல்படுத்திவதிலுமே முன்னுரிமை வழங்குவதாக அறிக்கை இருப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்க பட்டிருக்கிறது.



இலங்கை அரசின் செயற்பாடு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு இது தானா? என எந்த அரசியல்வாதியும் கேள்வி எழுப்பவில்லை. சாணக்கிய அரசியலில் குழப்பம் வரக்கூடாது என்பதால் அமைதியாக இருக்கிறார்கள் போலும் உள்ளது என சமூக வலைத்தளத்தில் கருத்து பகிரப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை