Skip to main content

ஜனாதிபதியின் செயலாளர் செய்தது தவறு!

May 09, 2020 314 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதியின் செயலாளர் செய்தது தவறு! 

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.



எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,



அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமைய பார்க்கையில் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக கணக்கறிக்கை தெரிவிக்கின்றது.



தற்போது மேலதிக கொடுப்பனவும், விசேட கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் ருபாய் அளவிலே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.



அரச ஊழியர்களின் சம்பளத்தை தடுத்துவைக்காமல் பொருளாதார செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.



பி.பீ.ஜயசுந்தர தனது தனிப்பட்ட கருத்தை ஜனாதிபதி செயலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கடித உறையில் வெளியிட்டிருந்தமை தவறாகும்.



இருந்த போதிலும் அவரது வேண்டுகோளுக்கிணங்க யார் வேண்டும் என்றாலும் அவர்களின் சம்பளத்தை தியாகம் செய்யலாம். ஆனால் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை