Skip to main content

பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற முதல் மனிதன்!..

Jan 11, 2022 65 views Posted By : YarlSri TV
Image

பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற முதல் மனிதன்!.. 

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.



சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.



பால்டிமோரில் நடந்த எட்டு மணி நேர பரிசோதனைக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு டேவிட் பென்னட் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றுள்ளார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.



ஒரு பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். வெள்ளிக்கிழமை பால்டிமோரில் எட்டு மணி நேர அறுவை சிகிச்சை இடம்பெற்றது.



இந்நிலையில், சிகிச்சை செய்துகொண்ட டேவிட் பென்னட்திங்களன்று நன்றாக இருந்ததாக மேரிலாந்து மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை