Skip to main content

விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார்!

Jan 01, 2022 87 views Posted By : YarlSri TV
Image

விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார்! 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் பலன் அடைகிறார்கள்.



இந்தத் திட்டத்தின்கீழ் 10-வது தவணையை புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி வழங்குவார், இந்தத் தொகையை அவர் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், பிரதம மந்திரி உழவர் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் 10-வது தவணையாக விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி இன்று நேரடியாக செலுத்தினார் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை