Skip to main content

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் சென்றது பாகிஸ்தானுக்கே அதிக லாபம் - அசாதுதீன் ஒவைசி

Aug 21, 2021 133 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் சென்றது பாகிஸ்தானுக்கே அதிக லாபம் - அசாதுதீன் ஒவைசி 

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலிபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.



இதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன.



இதேபோல் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதனால் பாகிஸ்தானுக்கே அதிக லாபம்.



ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளுக்குள் அல் கொய்தா மற்றும் டேயீஷ் பயங்கரவாத அமைப்பினர் நுழைந்துள்ளனர் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆனது இந்தியாவின் எதிரி. அந்த அமைப்பு தலிபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அவர்களை ஊதுகோலாகப் பயன்படுத்தி வருகிறது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை