Skip to main content

அர்த்தமுள்ள நாளாக அமையட்டும்; பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்து!

Jun 24, 2021 197 views Posted By : YarlSri TV
Image

அர்த்தமுள்ள நாளாக அமையட்டும்; பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்து! 

உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்.



தூய்மையான பௌத்த மதத்தை பின்பற்றி நல்லிணக்கத்துடன் வாழ எங்களுக்கு வழிகாட்டிய மஹிந்த தேரரின் இலங்கை வருகையை இந்த உன்னத பொசன் பூரணை தினத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்கின்றேன்.



தர்மாசோக மன்னனுக்கும், தேவநம்பியதீசனுக்கும் இடையிலான இராஜதந்திர நட்பின் சிறந்த விளைவாக இலங்கையில் பௌத்த சமயம் ஸ்ரீ புத்த ஆண்டு 236இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எமது இனம், மதம் மற்றும் கலாசாரத்தின் புதிய யுகம் தோற்றம் பெற்றது.



பௌத்த கலாசாரத்தில் கலை, கல்வி, பகுத்தறிவு, விவசாயம் ஆகிய அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்தன.



மஹிந்த தேரர் அறிமுகப்படுத்திய பௌத்தத்தின் உயிர்ச்சக்தி காரணமாக, இலங்கையர்கள் உலகின் வேறு எந்த இனத்திற்கும் அடிபணியாத உயரிய இனமாக பௌத்தம் உருவெடுத்துள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.



இந்த உன்னத பொசன் பூரணை தினம் தர்மத்தை அடைவதற்கு மனதை ஒளிரச் செய்யும் அர்த்தமுள்ள நாளாக அமையட்டும்! என்று நான் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை